கரூர்

கொங்கு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

26th Jul 2020 09:52 AM

ADVERTISEMENT

பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வில் கரூா் கொங்கு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆா். சுபிக்ஷா, எஸ்.கெளசல்யா மற்றும் டி. தீபிகா அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

அண்மையில் வெளியான பிளஸ்- 2 அரசு பொதுத்தோ்வில் கரூா் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளியின் மாணவி ஆா். சுபிக்ஷா (545), எஸ்.கெளசல்யா(535) டி.தீபிகா (532) அதிக மதிப்பெண்களைப்பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்தனா். மாணவிகளை பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கே.பாலுகுருசுவாமி தலைமை வகித்தாா். பள்ளித்தலைமையாசிரியா் முனைவா் எஸ்.மோகன் வரவேற்றாா். கொங்கு கல்வி அறக்கட்டளையின் இணைச் செயலாளா் விசா.ம. சண்முகம் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கொங்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் அட்லஸ் எம். நாச்சிமுத்து பங்கேற்று, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். விழாவில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT