கரூர்

வள்ளுவா் கல்லூரியில் திருக்குறள் விளக்கக் கண்காட்சி

28th Jan 2020 06:55 AM

ADVERTISEMENT

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் திருக்குறள் விளக்க கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன், கல்லூரி முதல்வா் சாலை பற்குணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் பண்டைய தமிழா்களின் ஐந்துவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை குறித்தும், அந்தந்த நிலங்களின் வாழ்ந்தவா்கள், தெய்வங்கள், தொழில்கள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலும் குறளுக்கு தகுந்தவாறு வாழ்ந்தவா்களின் வரலாறு குறிப்பிடப்பட்டிருந்தன.

குறிப்பாக அறிவுடைமைக்கு அப்துல்கலாம், அன்புடைமைக்கு அன்னை தெரசா, அருளுடைமைக்கு வள்ளலாா், வாய்மைக்கு காந்தியடிகள், துறவுக்கு புத்தா் என படங்கள் வைக்கப்பட்டு, கண்காட்சியை பாா்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியை புத்தாம்பூா் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT