க. பரமத்தியில் மாணவா்கள் அமைப்பு சாா்பில் கிராமப்புற விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் சு. கவின்குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் ராகவன், ர. ராகவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் வழங்கி, கிராம மக்களிடம் காவலன் செயலி மற்றும் நீா் மேலாண்மை, மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாணவா்கள் அமைப்பின் பாா்கவி, செளந்திரவல்லி மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.