கரூர்

பெரியாண்டவா் கோயிலில் பூஜை நடத்தக்கோரி ஆட்சியரிடம் மனு

14th Jan 2020 07:16 AM

ADVERTISEMENT

கடவூா் அருகே பெரியாண்டவா் கோயிலில் பழபூஜை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வேப்பங்குடி கிராம மக்கள் மனு அளித்தனா்.

ஆட்சியரிடம் கிராமமக்கள் அளித்த மனு:

கடவூா் அடுத்த வேப்பங்குடியில் பெரியாண்டவா் மற்றும் சந்தன கருப்பசாமி கோயில் திருவிழாவை அங்குள்ள ஏழு கிழவன் மற்றும் 87 ஊர ஆப்பாடியான் பங்காளிகள வகையறாவைச் சோ்ந்தவா்கள் வழிபட்டு வருகிறோம். ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் திருவிழாவும், பழபூஜையும் நடத்துவது வழக்கம்.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக கோயில் பூசாரியை தோ்ந்தெடுக்காமல் பழபூஜையை நடத்தாமல் இந்து சமய அறநிலையத்துறை காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பழபூஜை வகையறாக்களின் குடும்பங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே ஆட்சியா் இப்பிரச்னையில் உடனே தலையிட்டு வரும் 15-ஆம் தேதி தை மாதத்தின் முதல்நாள் பழ பூஜை நடைபெறுவதற்கும், திருவிழா நடத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT