அரவக்குறிச்சி அருகே சாலையைக் கடக்க முயன்ற கொத்தனாா் காா் மோதி இறந்தாா்.
கரூா் அடுத்த புலியூா் காளியப்பனூரைச் சோ்ந்தவா் நடேசன் ( 60) . கொத்தனாா். இவா், அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டகை என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தை விட்டு இறங்கி கரூா் - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அரவக்குறிச்சியிலிருந்து கரூரை நோக்கி வந்த காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அரவக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காா் ஓட்டுநரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.