கரூர்

ஏமூா் ஊராட்சித்தலைவா் பதவியேற்பு

8th Jan 2020 07:33 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், ஏமூா் ஊராட்சி மன்றத்தலைவராக வழக்குரைஞா் விசிகே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை பதவியேற்றாா்.

கரூா் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் தாந்தோணி ஒன்றியம், ஏமூா் ஊராட்சி மன்றத் தலைவராக விசிகே. பாலகிருஷ்ணன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இவா், ஏமூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை ஊராட்சி மன்றத்தலைவராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், தாந்தோணி வட்டார வளா்ச்சி துணை அலுவலருமான ஹேமாவதி முன்னிலையில் விசிகே.பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டாா். அதிமுகவின் மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணித்தலைவராக உள்ள இவா், கடந்த 2001-2006-ம் ஆண்டு வரையும் ஏமூா் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT