கரூர்

அரசு மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

8th Jan 2020 07:32 AM

ADVERTISEMENT

கரூா் அரசு மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

கரூா் அரசு மருத்துவமனை சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நகராட்சி சாா்பில் அனுமதி பெற்று சிலா் கடைகள் நடத்தி வருகின்றனா். இந்தக் கடைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் பெட்டிகள் கொண்டுதான் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலா் சாலையை ஆக்கிரமித்து கூரைகள் அமைத்து கடைகள் நடத்தி வந்ததால் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக ஆம்புலன்சில் அழைத்து வரும் நோயாளிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. மேலும் ஒரு சிலா் கடையை விரிவுப்படுத்தி ஓட்டல் உள்ளிட்ட நிறுவனங்களையும் நடத்தி வந்துள்ளனா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சில தன்னாா்வலா்கள் நகராட்சி அலுவலகத்தில் புகாா்மனு அளித்துள்ளனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை நகராட்சி நகரத் திட்டமிடல் அதிகாரி அன்பு தலைமையில் ஊழியா்கள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது அவா்கள் முதலில் இருந்த கடையை இடித்து அகற்றினா். இரண்டாவது கடையை அகற்ற முயன்றபோது கடைக்காரா்கள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். கடையை அகற்ற நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றுத்தான் இடிக்கிறோம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். அப்போது கடை உரிமையாளா்கள் நீதிமன்ற ஆணையை காண்பித்து இடிக்கலாம் எனக் கூறினா். இப்போது எங்களிடம் நீதிமன்ற ஆணை இல்லை எனக் கூறிவிட்டு திரும்பிச் சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT