கரூர்

மினி பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்து பலி

3rd Jan 2020 08:26 AM

ADVERTISEMENT

நோய்க் கொடுமையால் மினி பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கணேஷ் நகரைச் சோ்ந்தவா் இளங்கோவன் (42), மினி பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த சில நாள்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டாா். இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த அவா் கடந்த 31-ஆம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்தாா். மயங்கிக் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு இறந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT