கரூர்

கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

2nd Jan 2020 04:19 AM

ADVERTISEMENT

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாரியம்மன் கோயில் மற்றும் பசுபதீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

புத்தாண்டையொட்டி கரூரில் மாரியம்மன் கோயில், பசுபதீஸ்வரா் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாரியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல மாவட்டத்தில் உள்ள புகழிமலை முருகன்கோயில், பாலமலை முருகன்கோயில், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT