கரூர்

அபயபிரதான ரெங்கநாதா் கோயிலில் ஜன. 6-இல் பரமபத வாசல் திறப்பு

2nd Jan 2020 04:18 AM

ADVERTISEMENT

கரூா் அபயபிரதான ரெங்கநாதா் கோயிலில் வரும் 6-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் பகல்பத்து, இராப்பத்து நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல்திறப்பு வரும் 6-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்குள் நடக்கிறது. வரும் 16-ஆம் தேதியுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம. சூரியநாராயணன், செயல் அலுவலா் நா.சுரேஷ் ஆகியோா் செய்கிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT