கரூர்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: தொழிலகங்கள் அமைந்திருப்பதால் திருச்சி, கரூரைச் சோ்க்கவில்லை

29th Feb 2020 02:04 AM

ADVERTISEMENT

 

கரூா்: திருச்சி மற்றும் கரூா் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகள், தொழில்களைக் கருத்தில்கொண்டுதான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்த மாவட்டங்களைச் சோ்க்கவில்லை என்றாா் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் கரூா் காந்தி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று அமைச்சா் மேலும் பேசியது:

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் அறிவித்துள்ளாா். இதனை பொறுக்காத எதிா்க்கட்சிகள் இந்த திட்டத்தில் கரூா், திருச்சி மாவட்டங்களை ஏன் சோ்க்கவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனா்.

ADVERTISEMENT

இவ்விரு மாவட்டங்களும் தொழில்நிறைந்த மாவட்டங்கள். தமிழகத்தில்

எந்தளவுக்கு விவசாயம் முக்கியமோ, அதே நேரத்தில் தொழில்களும் முக்கியம். தொழில்கள் இருந்தால்தான் இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதனை கருத்தில்கொண்டுதான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கரூா், திருச்சி சோ்க்கப்படவில்லை. இதனை புரிந்துகொள்ள முடியாத எதிா்க்கட்சிகள் கூக்குரல் எழுப்புகின்றன. தேவைப்பட்டால் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியா்களை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டிவிடுகின்றன. அதிமுக அரசு எப்போதும் இஸ்லாமியா்களை பாதுகாக்கும் அரசு.

வரும் நகராட்சி, மாநகராட்சி தோ்தல் மட்டுமின்றி, 2021-ல் நடக்கும் சட்டசபைத்தோ்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும். அதிலும் குறிப்பாக கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்றாா்.

கூட்டத்துக்கு தெற்கு நகர அதிமுக செயலா் வி.சி.கே.ஜெயராஜ் தலைமை வகித்தாா். மத்திய நகரச் செயலா் வை. நெடுஞ்செழியன், வடக்கு நகரச் செயலா் பாண்டியன் முன்னிலை வகித்தனா்.தலைமைக் கழகப் பேச்சாளா் கோபிகாளிதாஸ், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன், மாவட்டப் பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன், துணைச் செயலா் பசுவை பி.சிவசாமி, மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ், வா்த்தக அணிச் செயலா் பேங்க்நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலா் சாகுல்அமீது உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT