கரூர்

பைக் மீது லாரி மோதல்: கூலித் தொழிலாளி சாவு

22nd Feb 2020 08:08 AM

ADVERTISEMENT

லாலாபேட்டை அருகே பைக் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தாா்.

கரூா் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்தவா் ஆசிா்வாதம் (65), கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை மாலை தனது பைக்கில் கரூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுமகாதானபுரம் வளைவில் திரும்பியபோது பின்னால் வந்த லாரி மோதி படுகாயமடைந்தாா். கரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT