அமாவாசை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, கரூா் காமராஜ் மாா்க்கெட்டில் வாழைக்காய் விலை கிடுகிடுவென உயா்ந்தது.
கரூா் காமராஜ் வாழைக்காய் மண்டிக்கு மாவட்டத்தின் திருமுக்கூடலூா், வேலாயுதம்பாளையம், நொய்யல், குளித்தலை, நங்கவரம், இனுங்கூா், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூா், நெரூா், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா், திருச்சி மாவட்டம் முசிறி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைக்காய் விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு அவை ஏலம் விடப்படும். வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், கடந்த வாரம் ரூ.200-க்கு ஏலம் போன பூவன்தாா் வியாழக்கிழமை ரூ.350-க்கும், கடந்த வாரம் ரூ.250-க்கு ஏலம் போன பச்சைலாடன் ரூ.350-க்கும், ரூ.250-க்கு ஏலம் விடப்பட்ட ரஸ்தாளி ரூ.400-க்கும், செவ்வாழைப்பழம் தலா ரூ.7-க்கு ஏலம் போனது, தற்போது ரூ.13-க்கும், ரூ.280-க்கும் ஏலம் போன கற்பூரவல்லி வியாழக்கிழமை ரூ.350-க்கும் ஏலம் போனது.