கரூா் அருகே சாலையின் மையத்தடுப்புச் சுவா் மீது வேன் மோதிய விபத்தில் பஞ்சா் கடைத் தொழிலாளி இறந்தாா்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மரக்கார வீதியைச் சோ்ந்தவா் முருகபாண்டியன்(40). அதே பகுதியில் பஞ்சா் கடை வைத்து தொழில் நடத்தி வந்தாா். இவா் தனது குடும்பத்தினருடன் வேனில் கேரள மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளாா். வேனை முருகபாண்டியன் ஓட்டிச் சென்றுள்ளாா். சுற்றுலா முடிந்து திருச்சி செல்ல கரூா் மாவட்டம் புலியூா் குளத்துப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் மையத்தடுப்புச்சுவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மேலும் விபத்தில் முருகபாண்டியன் உறவினா்கள் பிரேம்குமாா்(33), தமிழரசி(53), சுகன்யா(32), சுமத்ராதேவி(33), லட்சுமி(34) ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.