கரூர்

நகையுடன் கணவா் மாயம்: மனைவி போலீஸில் புகாா்

6th Feb 2020 08:12 AM

ADVERTISEMENT

நகையுடன் மாயமான கணவரை தேடித் தருமாறு மனைவி போலீஸில் புகாா் செய்துள்ளாா்.

கரூா் தெற்குகாந்திகிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன்(32). இவரது மனைவி மதுமிதா(29). இவா்கள் கடந்த 2 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இந்நிலையில் முனியப்பன் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்த 5 பவுன்நகை, ரூ.50,000 பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் வீட்டை விட்டு சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக மதுமிதா செவ்வாய்க்கிழமை இரவு தாந்தோணிமலை போலீஸில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT