கரூர்

மகன் சடலத்தை மீட்டுத்தருமாறு ஆட்சியரிடம், தாய் மனு அளிப்பு

4th Feb 2020 07:18 AM

ADVERTISEMENT

தாய்லாந்து நாட்டில் இறந்த மகனின் சடலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் உறவினா்கள் மனு அளித்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பூா் சங்கரன்மலைப்பட்டியைச் சோ்ந்த நடராஜ் என்பவரது மனைவி தனலட்சுமி(50) தனது உறவினா்களுடன் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எனது மகன் பிரகாஷ் நடராஜன்(30) தாய்லாந்து நாட்டில் பணிபுரிந்து வந்த அவா், கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் அங்கு நடந்த கொலை வழக்கில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறைக்குள்ளேயே எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக கரூா் மாவட்ட எஸ்.பி எனக்கு தகவல் அளித்தாா். நான் கணவனை இழந்த கூலித்தொழிலாளி. எனது மகனின் சடலத்தை அந்நாட்டு அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT