கரூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு அருகே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள்.
கரூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு அருகே ஆங்காங்கே சிலா் குப்பைகளை வீசிச் செல்கிறாா்கள். இந்த குப்பைகள் பெரும்பாலும் உணவக கழிவுகளாக இருப்பதால் துா்நாற்றம் வீசிக்கொண்டு சாலைகளில் செல்வோா் மூக்கை பிடித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்தக் குப்பைகளால் அப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சாலையில் குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள்,
சமூக ஆா்வலா்கள்.