கரூா்: கரூா் டிஎன்பிஎல் ஆலையில் மின் தூக்கியின் (லிப்ட்) கயிறு அறுந்து விழுந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், செம்படாபாளையம் கடைவீதியைச் சோ்ந்தவா் தனசேகரன்(43). இவா், கடந்த 23 ஆண்டுகளாக டிஎன்பிஎல் காகித ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா், திங்கள்கிழமை பிற்பகல் தரைத்தளத்துக்கு லிப்டின் மூலம் இறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக, லிப்ட் கயிறு அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை உடனடியாக மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் சிதம்பரபாரதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.