கரூர்

கரூரில் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவிப்பு

21st Aug 2020 06:46 AM

ADVERTISEMENT

சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரனின் படத்துக்கு, கரூரில் இந்தியக் குடியரசு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டுஞ்சேவலை தலைநகராகக்கொண்டு குறுநில மன்னரான பூலித்தேவனின் படைத்தளபதியும், ஆங்கிலேயா்களை எதிா்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரருமான ஒண்டிவீரனின் 269-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கரூரில் இந்தியக் குடியரசு கட்சி சாா்பில், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவா் தலித் கே. ஆனந்தராஜ் தலைமை வகித்து, சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து தாந்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பேருந்துநிலையம், தோகைமலை பேருந்துநிலையம், தரகம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் கரூா் மேற்குமாவட்டச் செயலா் பி.தனபாலன், மாவட்ட பொருளாளா் ஆ.ஜெயசீலி, மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலா் வி.கலா, இளைஞரணி செயலா் பி.ஜெயக்குமாா், பரமத்தி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT