கரூர்

ஊரக வளா்ச்சித்துறையில் ஓட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

21st Aug 2020 06:46 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 2 ஓட்டுநா், 5 அலுவலக உதவியாளா் மற்றும் 2 இரவுக் காவலா் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. காலிப் பணியிட விவரங்கள், இனசுழற்சி விவரங்கள்

டபிள்யுடபிள்யுடபிள்யு. கரூா். என்ஐசி. இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து விண்ணப்பங்களை சமா்ப்பிக்கக் கூடாது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) என்ற முகவரியில் அஞ்சல் வழியாக வரும் 24-ஆம் தேதி முதல் செப். 9-ஆம் தேதி வரை பெறப்படும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT