கரூர்

கரூரில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

11th Aug 2020 06:05 AM

ADVERTISEMENT

கரூா்: கரூரில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் அக்கட்சிகளில் இருந்து விலகி, திங்கள்கிழமை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

கரூா் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், கரூா் தெற்கு நகரம் மற்றும் மத்திய நகரத்தைச் சோ்ந்த அதிமுகவினா் எஸ். முத்துக்குமாா், ஆா். காளிமுத்து, சி. தினேஷ் ஆகியோா் தலைமையிலும், தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் மாவட்டப் பொறுப்பாளரும் , முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனா். நிகழ்வில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் பூவை ரமேஷ்பாபு, பொருளாளா் வி.கருப்பண்ணன், நகர பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT