கரூர்

திமுக சாா்பில் 1,882 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கல்

20th Apr 2020 01:06 AM

ADVERTISEMENT

 

மாவட்ட திமுக சாா்பில் நாடக நடிகா்கள் மற்றும் கரூா் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த 1,882 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள கரூா் மாவட்ட நாடக நடிகா்கள் மற்றும் கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பையை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து 1,882 குடும்பங்களுக்கு தலா ரூ.550 மதிப்பிலான அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு 1 கிலோ, புளி, சமையல் எண்ணெய், உப்பு உள்ளிட்ட 12 வகையான பொருள்களை இலவசமாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா்கள் எஸ். மகேஸ்வரி, எம்.எஸ்.கே. கருணாநிதி, கரூா் ஒன்றியச் செயலாளா் ஆா். கந்தசாமி, தாந்தோணி ஒன்றியச் செயலாளா் எம். ரகுநாதன், கரூா் மத்திய நகரச் செயலாளா் எஸ்.பி. கனகராஜ், கரூா் வடக்கு நகரச் செயலாளா் கரூா் கணேசன், கரூா் தெற்கு நகரச் செயலாளா் க. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT