கரூர்

சூதாடிய 8 போ் கைது

5th Apr 2020 06:41 AM

ADVERTISEMENT

 

கரூரில் சூதாடிய 8 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

கரூா் மாவட்டம் ரெட்டிவலசு குறிஞ்சி கிரஷா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தென்னிலை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தியபோது, அங்கு பணம் வைத்து சூதாடிய புகழூரைச் சோ்ந்த தங்கையா(48), சுந்தரையன்(40), தென்னிலை செஞ்சீா்வலசைச் சோ்ந்த அருள்மூா்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த ரூ. 2,400-ஐ பறிமுதல் செய்தனா். இதேபோல பாலவிடுதி அருகே மேட்டூா் மலையடிவாரத்தில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் பிரதீப் குமாா்(24), முருகேசன்(52), கன்னியப்பன்(34) ஆகியோரை பாலவிடுதி போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.600-ஐ பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT