கரூர் மாவட்டத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்துதுறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வாழ்த்து பெற்றனர்.
கரூர் மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி தெற்கு நகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட விசிகே.ஜெயராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட என்.தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட கேசிஎஸ்.விவேகானந்தன், கரூர் வடக்கு நகரச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.பாண்டியன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு கரூர் மாவட்ட அதிமுக செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், துணைச் செயலாளர் பசுவைசிவசாமி, மத்திய நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.