கிருஷ்ணராயபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(32). இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து, மன்னார்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செந்தில்குமாரைத் தேடி வருகின்றனர்.