கரூர்

பண்டுதகாரன்புதூரில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி

7th Sep 2019 10:05 AM

ADVERTISEMENT

பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கறவைமாடு வளர்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மையத்தின் தலைவர் பெ.வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில், பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்து இலவசப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. 
இப்பயிற்சியில் அறிவியல் ரீதியாக கறவை மாடு வளர்ப்பு தொழில்நுட்பங்கள்,  கறவை மாட்டு இனங்கள் மற்றும் பால் உற்பத்திக்கு தரமான மாடுகளை தேர்வு செய்தல், பண்ணை கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கி கடன் உதவி, காப்பீடு திட்டங்கள் மற்றும் பண்ணைப் பொருளாதாரம், பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகள், குறைந்த விலையில் சொந்தமாக கலப்பு தீவனம் தயாரித்தல், அசோலா மற்றும் மண்ணில்லா முறையில் தீவன உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபோர் அலுவலக தொலைபேசி எண். 04324 294335, செல்லிடப்பேசி எண் 73390 57073 ஆகியவற்றில் அழைத்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT