கரூர்

டி.என்.பி.எல். மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு விருது

7th Sep 2019 10:06 AM

ADVERTISEMENT

டி.என்.பி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வருக்கு கல்வித்துறையில் சீர்மையாக செயல்பட்டதை பாராட்டி முன்னோடி பெண்மணி விருது என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது, உலக அளவிலான முன்னுதாரணமான ஆசிரியர்களுக்கான குளோபல் டீச்சர்ஸ் ரோல் மாடல் விருது உள்ளிட்ட விருதுகள் பெற்ற காகிதபுரம் டி.என்.பி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தே.வள்ளியம்மையை, உலக உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் மகளிரியல் துறை கெளரவித்துள்ளது. 
கல்விச்சேவையில் முனைப்பாகப் பணியாற்றி ஆசிரிய சமுதாயத்திற்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன்னோடியாக விளங்கியதைப் பாராட்டி கெளரவப்படுத்தும் வகையில் "முன்னோடி பெண்மணி விருது - 2019' என்ற விருதினை அண்மையில் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
விருதுகள் பெற்று வரும் பள்ளி முதல்வரை டி.என்.பி.எல் பள்ளிக்குழுவின் தலைவர் எஸ்.வி.ஆர். கிருஷ்ணன், செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.பாலசுப்ரமணியன், பொருளாளர் பி.ஸ்ரீனிவாசராவ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் பாராட்டினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT