கரூர்

செப்.13ஆம் தேதி அம்மா திட்ட முகாம்

7th Sep 2019 10:07 AM

ADVERTISEMENT

கரூர் மாவட்டத்தில் வரும் 13ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
அரவக்குறிச்சி வட்டத்தில் கொடையூர் கிராமம், ஐந்து ரோடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்திலும், மண்மங்கலம் வட்டத்தில் கருப்பம்பாளையம் சமுதாயக் கூடக் கட்டடத்திலும், குளித்தலை வட்டத்தில் ராஜேந்திரம் வடக்கு  கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் சேங்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திலும், கடவூர் வட்டத்தில் பாப்பயம்பாடி கிராம நிர்வாக அலுவலகக்  கட்டடத்திலும், கரூர் வட்டத்தில் ஜெகதாபி கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்திலும், புகளூர் வட்டத்தில் மொஞ்சனூர் மேல்பாகம் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்திலும் நடைபெறவுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT