கரூர்

ஆர்ச்சம்பட்டியில் ரூ.4.94 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

7th Sep 2019 10:06 AM

ADVERTISEMENT

தோகைமலை ஊராட்சி ஒன்றியம், ஆர்ச்சம்பட்டியில் ரூ.4.95 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசியது:  
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இங்கு ரூ.31.50 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருந்தகம் திறப்பதற்கு முன்பு சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள நெய்தலூர் கால்நடை மருந்தகத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கால்நடை மருந்தகம் திறந்து வைத்ததின் மூலம் ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி.மலை, குழுப்போரி, ஆலந்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 7500 கால்நடைகள் பயன்பெற உள்ளது.
மேலும் தோகமலையில் உள்ள ராமபத்திர நாயக்கர் குளம் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.4.95 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் வரத்து வாரிகள் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் தேக்கிவைக்கபடும் நீரால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இராதாகிருஷ்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் செந்தில் (குளித்தலை), அமுதா (கரூர்),  கரூர் நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT