கரூர்

மாநில இளையோர் தடகளப்போட்டி:  வெற்றி விநாயகா பள்ளி சிறப்பிடம்

4th Sep 2019 08:45 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான இளையோர் தடகளப்போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான 34 ஆவது மாநில அளவிலான தடகளப்போட்டி திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.  இதில் 32 மாவட்டங்களில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 
கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பங்கேற்று, 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவி நிவேதிகா 600 மீ. ஓட்டப்போட்டியில் 1 நிமிடம் 40 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  
இம்மாணவி கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.  16 வயதிற்குட்பட்டோர் குண்டு எறிதல் போட்டியில் மாணவி பூஜா 10.84 மீ. தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  
சிறப்பிடம் பிடித்த மாணவிகள் மற்றும் கரூர் மாவட்ட தடகள சங்கச் செயலாளர் பெருமாள், சர்வதேச தடகள வீரரும், பயிற்சியாளருமான வீரப்பன், பயிற்சியாளர், பள்ளியின் உடற்கல்வி 
இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளியின் தாளாளர் ஆர்த்தி. 
ஆர். சாமிநாதன் , பள்ளியின் ஆலோசகர்  பி.பழனியப்பன்,  பள்ளியின் முதல்வர் டி. பிரகாசம், ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT