கரூர்

பைக் மோதி முதியவர் பலி

4th Sep 2019 08:46 AM

ADVERTISEMENT

சிந்தாமணிப்பட்டி அருகே பைக் மோதியதில் முதியவர் இறந்தார்.
  கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த மைலம்பட்டி சங்கிலிபூசாரியூரைச் சேர்ந்தவர் தண்டபாணி(62). இவர் திங்கள்கிழமை இரவு மைலம்பட்டி - தரகம்பட்டி சாலையில் மைலம்பட்டி  மேல்நிலை குடிநீர்த் தொட்டி அருகே நடந்துசென்றபோது பின்னால் வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து பைக்கை ஓட்டி வந்த மைலம்பட்டியைச் சேர்ந்த ராஜா மகன் ரகுபதி(19) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT