கரூர்

தொழிலாளியிடம் வழிப்பறி: இருவர் கைது

4th Sep 2019 08:46 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் தொழிலாளியிடம் கத்தியைக்காட்டி பணம் பறித்த இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(38). இவர், திங்கள்கிழமை இரவு அரவக்குறிச்சி பஜாரில் முருகன் கோயில் அருகே நடந்து வந்தபோது, அங்கு வந்த சின்னதாராபுரம் வெங்கிடாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன்(31), அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பிலாக்குறிச்சியைச் சேர்ந்த குணசேகரன்(39) ஆகியோர் சுப்ரமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 -ஐ பறித்துள்ளனர். 
இதுதொடர்பாக சுப்ரமணி அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸார் மகேந்திரன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT