கரூர்

தகராறில் இருவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

4th Sep 2019 08:45 AM

ADVERTISEMENT

மது போதையில் இளைஞர்கள் இருவரைக் கத்தியால் குத்திய 2 பேரைப் போலீஸார கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
கரூர் வெங்கமேடு அரசு காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவேணி. இவர், திங்கள்கிழமை இரவு அங்குள்ள உணவகத்துக்கு உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் நிசாந்த்(20), கிருஷ்ணன் மகன் கார்த்தி(19), தர்மலிங்கம் மகன் கார்த்தி(19) ஆகியோர் அம்சவேணியைக் கேலி கிண்டல் செய்துள்ளனர். 
இதுதொடர்பாக அம்சவேணி தனது மகன் கோபி(21) மற்றும் அவனது நண்பர் பஞ்சமாதேவியைச் சேர்ந்த மணிகண்டன்(22) ஆகியோரிடம் கூறியுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த கோபி, மணிகண்டன் ஆகியோர் நிசாந்த் உள்ளிட்டோரிடம் தட்டிக் கேட்டனர். இதையடுத்து, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நிஷாந்த், கார்த்தி, கார்த்தி ஆகிய மூவரும் கோபியையும், மணிகண்டனையும் கத்தியால் குத்தினர். 
இதில் படுகாயமடைந்த இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்தி, கார்த்தி ஆகியோரைக் கைது செய்தனர். நிசாந்தைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT