கரூர்

டி.ஆர்.ஓ பணியிடமாற்றம்: பாராட்டு விழா

4th Sep 2019 08:45 AM

ADVERTISEMENT

பணி மாறுதலாகிச்செல்லும் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாசுக்கு செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த முனைவர் ச.சூர்யபிரகாஷ், சென்னை கலைப்பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பொதுமக்கள் சார்பில் கரூரில் செவ்வாய்க்கிழமை மாலை பணி மாறுதல் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பிரம்மஸ்ரீ பொன்.பாண்டுரங்க சுவாமிகள் தலைமை வகித்து அருளாசி வழங்கிப் பேசினார். எவர்கிரின் பவுண்டேசன் தலைவர் ஸ்காட் தங்கவேல் வரவேற்றார். 
விழாவில், கரூர் வாசகர் வட்டத்தலைவர் தீபம் உ. சங்கர், ஜெயராம் கல்லூரி தலைவர் இன்ஜினியர் ராமசாமி, நெரூர் கைலாஸ் ஆஸ்ரம மடாதிபதி அமர்நாத் சுவாமிகள், வள்ளலார் மெய்ஞானசபை நிறுவனர ராமகிருஷ்ணன், புலியூர் அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்குத்தந்தை ஆண்டன் ஞானபிரகாசம், அனைத்து வணிகர் சங்கத்தலைவர் ராஜூ, அதிமுக முன்னாள் மாவட்ட பொருளாளர் பேங்க் நடராஜன், மகாதானபுரம் ராஜாராம் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். முடிவில் முனைவர் ச.சூர்யபிரகாஷ் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT