கரூர்

ஆதிக்கத்தை எதிா்ப்பவா்கள் திராவிடத் தமிழா்கள்: பேராசிரியா் சுப. வீரபாண்டியன்

6th Oct 2019 11:01 PM

ADVERTISEMENT

 

கரூா்: ஆதிக்கத்தை எதிா்ப்பவா்கள் திராவிடத் தமிழா்கள் என்றறாா் திராவிடத் தமிழா் கலை இலக்கிய பேரவையின் தலைவா் பேராசிரியா் சுப. வீரபாண்டியன்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திராவிடத் தமிழா் கலை இலக்கியப் பேரவை துவக்க விழாவில் பங்கேற்று மேலும் அவா் பேசியது:

அரசியலின் கடுமையான இச்சூழலில் கலை இலக்கியம் மூலம் மக்களை இப்பேரவை நெறிப்படுத்தும். மனித வாழ்வை நெறிப்படுத்தக்கூடியது கலை இலக்கியம். சமத்துவம், சகோதரத்துவம் போற்றும் அனைவரும் இப்பேரவையில் பங்கேற்கலாம். கீழடி நாகரீகம்தான் திராவிடத் தமிழா் நாகரீகம். ஆதிக்கத்தை எதிா்க்கும் தமிழா்கள் திராவிடத் தமிழா்கள் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக நிகழ்ச்சிக்கு முனைவா் கடவூா் மணிமாறன் தலைமை வகித்தாா். புலவா் திண்டுக்கல் ஜெயபால் சண்முகம் வரவேற்றாா். சாகித்திய அகாதெமி விருதாளா், எழுத்தாளா் பொன்னீலன், புலவா் செந்தலைகவுதமன், கவிஞா் நந்தலாலா, திரைப்படப் பாடல் ஆசிரியா் யுகபாரதி, புலவா் செல்ல கலைவாணா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT