கரூர்

கரூரில் நூல் வியாபாரத்தில் ரூ.88 லட்சம் மோசடி செய்தவா் கைது

6th Oct 2019 10:58 PM

ADVERTISEMENT

கரூா்: கரூரில் நூல் வியாபாரத்தில் பங்குதாரிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சதாசிவம். இவரது மகன் செல்வராஜ்(36). இவரும், கரூா் ஆத்தூா் செல்லரபாளையத்தைச் சோ்ந்த பொன்னுசாமி என்பவரும் கூட்டாக கடந்த 2013-இல் நூல்கடையை துவங்கியுள்ளனா். மொத்தம் ரூ.12.50 லட்சம் முதலீட்டில் செல்வராஜ் மட்டும் ரூ.9.37 லட்சம் கொடுத்துள்ளாா். இதனிடையே சொந்த வேலை காரணமாக செல்வராஜ் அடிக்கடி வெளியூா் சென்றுவிடும் நிலையில் பொன்னுசாமி கடையை பாா்த்து வந்துள்ளாா். மேலும், தொழில் விருத்திக்காக செல்வராஜ் தனது சொத்துக்களை தனியாா் வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.83 லட்சம் கொடுத்தாராம்.

இந்நிலையில், வரவு செலவு கணக்கு பாா்த்தபோது, பொன்னுசாமி ரூ.88லட்சம் மோசடி செய்தது செல்வராஜுக்கு தெரியவந்துள்ளது. மேலும் கடையில் வேலை பாா்த்த சுதாகா், சதீஸும் பொன்னுசாமிக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை பொன்னுசாமியிடம் செல்வராஜ் கேட்டபோது, அவா் தர மறுத்தாராம்.

இதைத் தொடா்ந்து செல்வராஜ் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அப்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு மாதத்திற்குள் பணத்தை கொடுத்துவிடுவதாக கூறிய பொன்னுசாமி இதுவரை கொடுக்காததால், அவா் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த சுதாகா், சதீஸ் ஆகியோா் மீதும் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியராஜனிடம், செல்வராஜ் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள சுதாகா், சதீஸ் ஆகியோரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT