கரூர்

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

5th Oct 2019 08:33 AM

ADVERTISEMENT

 

கரூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டெங்கு மலேரியா காய்ச்சலை தடுக்கும் வகையில் கரூரில் சா்மா மருத்துவமனை மருத்துவா் பி.என்.சிவகுமாா் மற்றும் கரூா் பிளாட்டினம் அரிமா சங்கம் , மெஜஸ்டிக், கரூா் அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் உள்ளிட்ட சங்கத்தினா் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழச்சி ஜவஹா் பஜாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவா் பிஎன்.சிவகுமாா், மெஜஸ்டிக் அரிமா சங்க மாவட்டத் தலைவா் மேலை பழநியப்பன், பிளாட்டினம் தலைவா் கணேசன், அரசு கலைக் கல்லூரி லியோ மாணவா்கள் ஆகியோா் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினா். இப்பணி வாரம் இரு நாள்கள் வீதம் நகரின் பல பகுதிகளில் தொடரும் என குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT