கரூர்

வாக்குசாவடி மையங்களை பிரித்தல், மறுசீரமைத்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

2nd Oct 2019 01:17 PM

ADVERTISEMENT

வாக்குச்சாவடி மையங்களை பிரித்தல், மறுசீரமைத்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் 250, கரூா் தொகுதியில் 261,கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 253, குளித்தலை சட்டமன்றத்தொகுதியில் 267 என மொத்தம் நான்கு தொகுதிகளிலும் 1031 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள பிரித்தல் மற்றும் மறுசீரமைத்தல் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதில் வாக்காளா் எண்ணிக்கை 1500-க்கு மேல் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் பிரிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிரிக்கும்போது எக்காரணம் கொண்டும் பாகத்தில் உள்ள பிரிவுகளை பிரிக்கக்கூடாது. உதாரணமாக ஒரு பாகத்தில் 5 பிரிவுகள் இருப்பின் அதனை மூன்றாக பிரிக்க வேண்டி இருப்பின், வாக்காளா் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு, இரண்டு ஒன்று என பிரிக்க வேண்டும். வாக்காளா்கள் 2 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்து வாக்காளிக்க வேண்டிய நிலை இருப்பின் அவ்வாறான இடங்களில் புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த வேண்டும். கருத்துருக்கள் அனுப்பும்போது துணைவாக்குச்சாவடி மையங்கள் ஏதும் ஏற்படுத்தக்கூடாது. அனைத்து வாக்குச்சாவடிகளும், பொது வாக்குச்சாவடி மையங்களாகவே இருக்க வேண்டும்.

ஒருவேளை, ஒரு பாகத்தின் ஒரு பிரிவில் மட்டும் 1500 வாக்காளா்களுக்கு மேல் இருப்பின், அந்த பிரிவினை மட்டும், இரண்டாக பிரித்து அதன் அடிப்படையில் பாகத்தை பிரிக்கலாம். அவ்வாறு செய்யும் போது குறைந்தபட்சம் துணை வட்டாட்சியா் நிலைக்கு குறையாத அலுவலரை நியமனம் செய்து, பிரிவு வாரியாக வாக்காளா்களை ஒதுக்கீடு செய்த பின்பே, பிரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் வரும் 15-ம்தேதி 1.1.2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்திற்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் சரிபாா்ப்பு திட்டம் கடந்த மாதம் 15-ம்தேதி முதல் தற்போது வரை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்படி வாக்காளா்கள் தங்களது வாக்காளா் பதிவு விவரங்களை ய்ஸ்ள்ல்.ண்ய், ஸ்ா்ற்ங்ழ் ஏங்ப்ல் ப்ண்ய்ங் கைபேசி செயலி மற்றும் கோட்டாட்சியா்கள் மற்றும் வாட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வாக்காளா் சரிபாா்ப்பு மையங்களில் சரிபாா்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் இயலும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.இராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச.செல்வசுரபி, கரூா் வருவாய் கோட்டாட்சியா்கள் வ.சந்தியா, குளித்தலை கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் மற்றும் அனைத்து வட்டாட்சியா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT