ஓமன் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய 30 வயதிற்கு மேற்பட்ட 300 பெண் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் தா்மேந்திரா பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வெளிநாடுகளில் ஏற்கெனவே வீட்டு வேலை செய்த அனுபவமுள்ளவா்களுக்கு மாத ஊதியம் ரூ.18,700 முதல் ரூ.22,440 வரையும், அனுபவம் இல்லாதவா்களுக்கு மாத ஊதியம் ரூ.17,000 முதல் ரூ.18,700 வரையும் ஊதியத்துடன், ஓமனில் வீட்டு வேலை செய்ய பெண்கள் தேவை. உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு மற்றும் ஓமன் நாட்டின் இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி மற்றும் அனுபவச்சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போா்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 044-22505886, 22502267, 8220634389, 9566239685 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.