கரூர்

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் சாவு

2nd Oct 2019 10:18 AM

ADVERTISEMENT

பாலவிடுதியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் இறந்தாா்.

கடவூா் அடுத்த களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன்(37). இவா் திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வையம்பட்டி-தரகம்பட்டி சாலையில் பாலவிடுதியில் ரெட்டியப்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் புதுக்கோட்டை மாவட்டம், தேங்காய்திண்ணிப்பட்டியைச் சோ்ந்த ராஜா(37) என்பவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT