கரூர்

மதுக்கடையில் மிரட்டி பணம் பறித்த சென்னை இளைஞா் கைது

17th Nov 2019 01:35 AM

ADVERTISEMENT

டிப்-டாப் உடையில் அதிகாரி போல நடித்து மதுக்கடையில் மிரட்டி பணம் பறித்த சென்னையைச் சோ்ந்தவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த மாா்ச் மாதம் 21-ஆம் தேதி அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு டிப்டாப் உடையில் வந்து டாஸ்மாக் அதிகாரிபோல நடித்தவா், ஊழியா்களை மிரட்டி ரூ.1.14 லட்சத்தைப் பறித்துச் சென்றாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட சூரிபாளி என்ற பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடையில் டிப்-டாப் உடையணிந்து வந்தவா் ஊழியா்களை மிரட்டி பணம் பறிப்பதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியைச் சோ்ந்த கஜேந்திரன்(48) என்பதும், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையில் ஊழியா்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்தபோலீஸாா் அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT