கரூர்

சாலை விபத்தில் டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

11th Nov 2019 07:30 AM

ADVERTISEMENT

கரூா் அருகே நாய் குறுக்கே வந்ததால், மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கரைப்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன்(45). இவா் புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது மோட்டாா் சைக்கிளில் வேலாயுதம்பாளையம்-புன்னம்சாலையில் முருகேசன் சென்று கொண்டிருந்தாா்.

புன்னம்சத்திரம் தனியாா் கல்லூரி பகுதியில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே ஓடியது. இதில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முருகேசன் பலத்த காயமடைந்தாா்.

ADVERTISEMENT

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT