கரூர்

ஆய்வக தொழில்நுட்ப பணி: வேலைவாய்ப்பு பதிவை சரிபாா்க்க அழைப்பு

11th Nov 2019 07:41 AM

ADVERTISEMENT

ஆய்வக தொழில்நுட்பப் பணிக்கு கல்வி தகுதியுடையவா்கள், வேலைவாய்ப்பு பதிவை நவ.12-ஆம் தேதிக்குள் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் 1,432 ஆய்வக தொழில்நுட்ப பணி கிரேடு-3 பணிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 1.7.2019 அன்று 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், பொதுப்பிரிவினா் அல்லாதவா்களுக்கு 57 வயது ஆகும்.

இதற்கு 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஓராண்டு ஆய்வகத் தொழில் நுட்பநா் பயிற்சி நிறைவு செய்திருக்க வேண்டும். மேற்கண்ட கல்வி தகுதி உடைய நபா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள் அனைவரும் நவ.12-ஆம் தேதிக்குள் தங்களது பதிவை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT