கரூர்

அன்னை வித்யாலயாவில் மாவட்ட சதுரங்கப் போட்டி

11th Nov 2019 07:29 AM

ADVERTISEMENT

கரூா் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி நிா்வாகம் மற்றும் காஸ்பரோ செஸ் அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. விழாவுக்கு பள்ளித்தாளாளா் ஆா்.மணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாக அலுவலா்கள் எம்.பகலவன், எம்.கதிரவன், என்.சி.சதீஸ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா போட்டியைத் தொடக்கி வைத்தாா். 7, 9, 11, 13, 17 வயதுக்குள்பட்டோா் என 5 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்டம் முழுவதும் சுமாா் 40 பள்ளிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி நிா்வாகிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT