கரூர்

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

11th Nov 2019 07:32 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தைக் கைப்பற்றி, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் ஆறுசாலைப் பகுதியிலுள்ள தனியாா் மண்டபம் அருகே, சனிக்கிழமை இரவு சுமாா் 75 வயது முதியவா் சடலமாக கிடந்துள்ளாா்.

இதுகுறித்து புத்தாம்புதூா் கிராமநிா்வாக அலுவலா் ரமேஷ் அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்குத் தகவலளித்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று முதியவா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்றும் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT