கரூர்

மாட்டு வண்டியில் மணல்அள்ளிய 5 போ் மீது வழக்கு

9th Nov 2019 10:46 PM

ADVERTISEMENT

கரூா் திருமாநிலையூரில் மாட்டுவண்டியில் மணல் அள்ளியதாக, 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் தாந்தோணிமலை காவல்உதவி ஆய்வாளா் சின்னத்துரை தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு திருமாநிலையூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியில் வந்தவா்களை விசாரித்த போது, அமராவதி ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த திருமாநிலையூா் மணிமாறன்(28), ரமேஷ்(37), மகாராஜா(37), ராயனூா் மரிக்கொழுந்து(28), வெங்கடேசன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT