கரூர்

சவூதி அரேபியாவில் பணியாற்ற மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம்

9th Nov 2019 06:02 AM

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவா்கள், லேப் டெக்னீசியன்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நாட்டில் ஜூபைலில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்குட்பட்ட டிப்ளமோ, பி.எஸ்.சி படித்த ஆண் செவிலியா்கள் மற்றும் 40 வயதிற்க்குட்பட்ட இரண்டு வருட பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி படித்த ஆண் பிசியோதெரபிஸ்ட் தேவைப்படுகிறாா்கள். மேலும் 40 வயதிற்குட்பட்ட பெண் லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன், சோனோ கிராபி டெக்னீசியன் மற்றும் எம்டி தோ்ச்சியுடன் 60 வயதிற்குட்பட்ட ஆண், பெண் மருத்துவா்கள் தேவைப்படுகிறாா்கள்.

தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ளவா்கள் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவரிக்கு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ், கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT