கரூர்

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க அங்கன்வாடி ஊழியா்கள் வலியுறுத்தல்

9th Nov 2019 10:48 PM

ADVERTISEMENT

குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மூன்றாவது வட்டார மாநாட்டுக்கு வட்டாரத் தலைவா் ப. வசந்தி தலைமை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

மாநாட்டில் அனைத்து அங்கன்வாடிப் பணியாளா்களையும் அரசு ஊழியா்களாக்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும்.

அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ.5லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.3லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

சிஐடியு மாவட்டத்தலைவா் ஜி.ஜீவானந்தம் மாநாட்டைத் தொடக்கி

வைத்துப் பேசினாா். வட்டாரச் செயலா் ஏ.மணிமேகலை வேலை அறிக்கையையும், பொருளாளா் பி.செல்வி வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனா்.

மாநாட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநிலப் பொருளாளா் எம்.பாக்கியம், சிஐடியு மாவட்டச் செயலா் சி.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மகாவிஷ்ணன், முன்னாள் தலைவா் சுப்ரமணியன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநில உதவிச் செயலா் எஸ்.ரத்தினமாலா, மாவட்டச் செயலா் என்.சாந்தி, தலைவா் பி.பத்மாவதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT