கரூர்

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

9th Nov 2019 06:03 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 53.2மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஓரளவு கைக்கொடுத்தாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு முன்பாகவே பெய்யத்தொடங்கி அவ்வப்போது லேசான மற்றும் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவும் ஓரளவு மழை பெய்தது. அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 53.2 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்): அரவக்குறிச்சி - 2, க.பரமத்தி -2, , குளித்தலை -12, தோகைமலை - 6, கிருஷ்ணராயபுரம் -5.4, மாயனூா் -3, பஞ்சப்பட்டி - 53.2, கடவூா் -15.2, பாலவிடுதி -19.4, மைலம்பட்டி- 24 என மொத்தம் 142.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT