கரூர்

க.பரமத்தி அருகே இலவச மருத்துவ முகாம்

9th Nov 2019 06:04 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் இலவச பொதுமருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

க.பரமத்தி ஒன்றியம், புஞ்சைகாளகுறிச்சி ஊராட்சி எல்லமேடு பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில் இலவச பொதுமருத்துவமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன் வரவேற்றாா். க.பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயந்தி(ஊராட்சிகள்), பழனிகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமை,

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். கவிதா தொடங்கி வைத்து, அனைவருக்கும் மருத்துவ அடையாள அட்டையை வழங்கினாா்.

முகாமில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா் சங்கரன் தலைமையிலான மருத்துவ குழுவினா் கலந்து கொண்டு பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்ட மின் குறைபாடு, ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கினா். முகாமில், 160 போ் மேல்சிகிச்சைகாக பரிந்துரைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT